நான் அசோக் செல்வனை காதலிக்கின்றேனா ??? :கடுப்பில் பிரகதி விளக்கம்
நடிகர் அசோக் செல்வன் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி இருவரும் காதலிப்பதாகவும் மிகவும் நெருங்கி பழகுவதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது .
இந்நிலையில் இதற்கு ஒரு முற்று புள்ளி வைப்பதற்காக பிரகதி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் .
நான் யாரையும் காதலிக்கவில்லை, திருமணம் செய்யப் போவதும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு 21 வயது தான் ஆகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டே பாடும் நான் திருமணம் செய்யும் இடத்தில் இல்லை.
என் ரசிகர்களுடான உறவை நினைத்து பெருமையாக உள்ளது. நான் காதலித்தால் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். என் நெருக்கமான நட்பை பற்றி ஒரு செய்தி வெளியானதால் இந்த கதை ஆரம்பித்தது.
காதல் செய்தியை பார்த்து முதலில் காமெடியாக இருந்தது. ஆனால் அனைத்து ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிடவே நான் அதிருப்தி அடைந்தேன். என்னை பற்றி மீடியா தவறான தகவலை பரப்புவதால் அதிருப்தி அடைந்துள்ளேன்.
அசோக் மற்றும் என்னுடைய வெற்றிகளை பற்றி செய்தி வெளியிடாமல் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான செய்தி வெளியானதில் அதிருப்தி அடைந்துள்ளேன். மீடியாக்களுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. பேட்டிகள் அளிப்பது, பத்திரிகையாளர்களுடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் இன்று அவர்களே ஆதாரமில்லாத செய்தியை வெளியிட்டது அதிருப்தி அளிக்கிறது.ஒரு போட்டோவை வைத்து இப்படி பொய்யான செய்திகள் பரப்புவது ஊடக தர்மமில்லை .
இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பையும், ஆதரவையும் பெற நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை என பிரகதி தெரிவித்துள்ளர்.
மேலும் இது வருத்தத்தை அளிப்பதாக பிரகதி தெரிவித்துள்ளார்
Post a Comment