சூசனா மீது ஆவேசத்தில் கொந்தளித்த அபர்ணதி. தலை முடி வெட்டுவதாக சபதம்
பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையை போட்டியாளராக கலந்துகொண்டிருந்த அபர்ணதி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
அப்போது ‘இந்த நிகழ்ச்சியானது ஏற்கனவே தயார் படுத்தப்பட்ட கதை வசனங்களுடன் நடாத்தப்பட்ட நிகழ்ச்சியா? எனக் கேட்டபோது ‘ சாத்தியமா அப்படி ஏதும் இல்ல. எதுவுமே திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட நிகழ்ச்சியில்லை. அப்பப்போ நம்ம பேசுறது மட்டும் தான்’ என்று அபர்ணதி வெளிப்படையாக கூறியிருந்தார்.
இதைக்கேட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் ‘ நீங்கள் இப்படி கூறுகிறீர்கள். இதற்கு முன்னர் போட்டியாளர் சுசனாவுடன் நடந்த ஒரு பேட்டியில் அவரின் ரசிகர் கேட்டிருந்தார் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியா என்று ? அதற்கு அவர் ‘ஆம்’ என்று கூறியிருந்தார். ஆனால் நீங்கள் இல்லை என்று கூறுகிறீர்கள். இதை பற்றி என சொல்ல நினைக்கிறீங்கள்? என்று கூறியிருந்தார்.
இதை கேட்டு ஆவேசப்பட்ட அபர்ணதி ‘ இதில் எதுவும் உண்மை இல்லை. சாத்தியமா நான் சொல்றன். அவங்க சொல்றதுல எதுவுமே உண்மை இல்ல. அப்படி எதுவும் திட்டமிட்டு நடக்கல. இறுதிப்போட்டியில் ஏமாற்றப்பட்டவுடன் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்ல. நடந்ததை உண்மை தான் என்று நிரூபிக்க சொல்லுங்க. நான் என் முடியை முற்று முழுசா வெட்டிடுறேன்.’ என்று கோபத்தின் உச்சியில் இருந்த அபர்ணதி சுசனாவுக்கு ஒரு பகிரங்க சவால் விடும் படி கூறியிருந்தார்.
Post a Comment