Header Ads

ad

இணையத்தில் கசிந்த அஜித், விஜய், சூர்யா படங்களின் கதைகள் : பெரும் பரபரப்பு..!

அஜித், விஜய், சூர்யா ஆகியோர் நடிக்கும் படங்களின் கதைகள் இணையத் தளத்தில் கசிந்து விட்டதாக பரவும் வதந்தியால் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கதைகள் உண்மையானதா..? அல்லது கற்பனையானதா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விஜய் நடித்து வரும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
இவர்கள் கூட்டணியில் வந்த ”துப்பாக்கி”, ”கத்தி” படங்களுக்கு வரவேற்பும், வசூலும் இருந்ததால் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் ஓய்வில்லாமல் நடந்து வருகிறது.
பட அதிபர்கள் வேலை நிறுத்தம் நடந்தபோதும் விசேஷ அனுமதி பெற்று படப்பிடிப்பை தொடர்ந்தனர். இணையத்தளத்தில் பரவி உள்ள இந்த படத்தின் கதை என்னவென்றால், விஜய் சாதாரண இளைஞனாக வாழ்க்கையை நகர்த்துகிறார்.
அப்போது அவருக்கு அரசியல்வாதிகளால் எதிர்பாராத தொல்லைகள் வருகிறது. அதை எதிர்க்கும்போது சில இழப்புகளை சந்திக்கிறார். அதன்பிறகு அரசியல்வாதியாக முடிவு செய்து அதற்கான காய்களை நகர்த்துவதும் அரசியல்வாதி ஆனாரா..? என்பதும் மீதி கதை. விவசாயிகளுக்கு கெடுதல் செய்யும் அரசியல்வாதிகளை பழிவாங்கும் கதை என்ற தகவலும் உலவுகிறது.
இந்த படத்துக்காக அரசியல் கட்சி மாநாடு காட்சியொன்றை படமாக்கி வருகிறார்கள் என்றும் அந்த வதந்தி சொல்கிறது.
அஜித்குமார் படத்துக்கு “விஸ்வாசம்” என்று பெயர் வைத்து ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். சிவா இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் “வீரம்”, “வேதாளம்”, “விவேகம்” படங்கள் வந்துள்ளன. கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். இந்த படத்தின் கதை எப்படி இருக்கும் என்று பலரும் யோசனையில் இருக்க டுவிட்டரில் ஒரு கதை உலா வருகிறது.
அஜித்குமார் அண்ணன், தம்பியாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சிறையில் இருந்து விடுதலையாகும் அண்ணன் அஜித் தம்பி அஜித்தை பார்க்க சொந்த கிராமத்துக்கு செல்கிறார். அங்கு தம்பியை கிராமங்களை ஆட்டி படைக்கும் பயங்கர வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். அவர்களை அண்ணன் அஜித் பழிவாங்குகிறார்.
அத்துடன், படத்தில் கதையின் முக்கிய கருவாக நியூட்ரோ அபாயத்தை சொல்லும் சமூக பிரச்சினையும் உள்ளது என்கிறது அந்த தகவல்.
அதைத் தொடர்ந்து, சூர்யா படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இதற்கு என்.ஜி.கே என்று பெயரிட்டுள்ளனர். நாயகிகளாக ரகுல்பிரித்சிங், சாய்பல்லவி வருகிறார்கள். இப் படம் ஒரு போராளியின் கதை என்று தகவல் பரவி உள்ளது.
இதற்கு டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள செல்வராகவன்.. :-
“சில வதந்திகள் பற்றி கேள்விப்பட்டேன். உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நாங்கள் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.