பிரபுதேவாவை திருமணம் செய்கிறேனா?: நடிகை நிகிஷா
பிரபுதேவாவை திருமணம் செய்வது குறித்து நடிகை நிகிஷா பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர் இங்கிலாந்தை சேர்ந்த நிகிஷா பட்டேல். தலைவன், என்னமோ ஏதோ, 7 நாட்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் பிரபுதேவா பற்றி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபுதேவாவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்களா என்று பேட்டி ஒன்றில் நிகிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நீங்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள் நானோ பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றார்.
என்னது அந்த நடிகை பிரபுதேவாவை கல்யாணம் செய்யப் போகிறாரா, அதனால் தான் அப்படி பேட்டி கொடுத்தாரா என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.
ஆளாளுக்கு தன்னை பற்றி பேசுவதை பார்த்து நிகிஷா பட்டேல் எரிச்சல் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் பிரபுதேவாவுடனான திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மீடியாக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகளால் கடுப்பாகிவிட்டேன். இது உண்மை அல்ல. இந்த செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. பிரபுதேவா வெறும் நண்பர் தான். அவரை நான் சார் என்றே அழைக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார் நிகிஷா.

Post a Comment