கண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..?
“ஏமாலி” படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை அதுல்யா. மேலும், ”காதல் கண் கட்டுதே” படத்தின் மூலம் கண்ணசைவினாலும் இவர் இளைஞர்களை கட்டிப் போட்டார்.
தற்போது, சமுத்திரகனி இயக்கத்தில் பெரிய ஹிட் அடித்த
”நாடோடிகள்” படத்தின் இரண்டாம் பாகத்தில் அதுல்யா நடித்து வருகிறார். சசிகுமார், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய தோற்றங்களில் நடித்து வருகின்றனர்.
”நாடோடிகள்” படத்தின் இரண்டாம் பாகத்தில் அதுல்யா நடித்து வருகிறார். சசிகுமார், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய தோற்றங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதுல்யா திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது. என்னது அதுக்குள்ளாக திருமணமா என சமூக தளங்களில் இளைஞர்கள் உச் கொட்டி வருகின்றனர்.
ஆனால், சிலர் இந்த புகைப்படத்தை குறித்து ஆராய்ந்து, நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
அதாவது, இந்த புகைப்படம் “நாடோடிகள்-2” படத்துக்காக எடுக்கப்பட்டது.
அதில் அவருக்கு திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் புகைப்படத்தை அதுல்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவருக்கு திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் புகைப்படத்தை அதுல்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனி உடன் உள்ளார். இந்த புகைப்படம்தான், அதுல்யா திருமணாகி விட்டதா என இளைஞர்களின் மூளையை கசக்கி வைரலானது.
அத்துடன், ”சுட்டுப்பிடிக்க உத்தரவு”, ”என் பெயர் அனந்தன்” ஆகிய படங்களில் அதுல்யா நடித்து வருகிறார்
Post a Comment