கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!
சிவகார்த்திகேயன் மற்றும் அமலா பாலின் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தனுஷ், ஜெனிலியா நடித்த ”உத்தமபுத்திரன்” படம் மூலம் கோலிவுட் வந்தவர் தெலுங்கு நடிகையான சுரேகா வாணி.
”காதலில் சொதப்புவது எப்படி” படத்தில் அமலா பால் அம்மாவாகவும், ”எதிர்நீச்சல்” படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாகவும், விஜய்யின் ”மெர்சல்” படத்தில் நர்ஸாகவும் நடித்துள்ளார் சுரேகா.
அதுமட்டுமல்லாமல் இவர் அண்ணி, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.
படங்களில் குடும்பத்து குத்து விளக்காக நடித்து வரும் சுரேகா வாணி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி தெலுங்கு திரையுலக ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
படங்களில் சேலை அணிந்து அடக்கமாக வரும் நீங்களாம்மா இப்படி நீச்சல் உடையில் இருக்கிறீர்கள். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று டோலிவுட் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் சுரேகாவை விளாசியுள்ளனர்.
இதற்கு, முன்னதாக சுரேகா வாணி தன் வீட்டில் குட்டியோண்டு டிரவுசர் போட்டு மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ வெளியானபோது தான் ரசிகர்கள் உண்மையில் பேரதிர்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Photo Source - idlebrain.com
Post a Comment