சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்த முக்கிய அறிவிப்பு..!
சிவகார்த்திகேயன் – சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகி வரும் ”சீமராஜா” படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நாளை ஆரம்பிக்க இருக்கிறது.
பொன்ராம் இயக்கத்தில், உருவாகும் படம் ”சீமராஜா”. தற்போது தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ”சீமராஜா” படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
வருகிற மே 24-ஆம் திகதி தலக்கோணத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் மே 15-ம் திகதி (இன்று) துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகை சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கின்றனர்.
மேலும், 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Post a Comment