Header Ads

ad

அந்த நடிகையின் கணவர் வந்தால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வர ரெடி: ராய் லட்சுமி !

அந்த நடிகையின் கணவர் வந்தால் தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயார் என்று ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். 

உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் வீடு சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் நடிகை ராய் லட்சுமி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவலை அறிந்து ராய் லட்சுமி அதிருப்தி அடைந்தார். ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் தமிழ் ஏன் என்னை பற்றி தவறான செய்தியை பரப்புகிறது? ஏன்? ஏன்? ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்களை பிக் பாஸ் வீட்டில் பார்க்க விரும்புகிறோம் என்று நடிகை பிபாஷா பாசுவின் கணவரும், நடிகருமான கரண் சிங் குரோவர் ட்வீட்டினார். அதை பார்த்த ராய் லட்சுமி நீங்கள் என் பார்ட்னராக வந்தால் மட்டுமே கலந்து கொள்வேன் என்று பதில் அளித்துள்ளார்.

உங்களின் மொத்த குழுவையும் பிக் பாஸ் வீட்டில் பார்க்க விரும்புகிறேன் என்றவரிடம் வீடு பத்திக்கும் என்று பதில் அளித்துள்ளார் ராய் லட்சுமி.

ராய் லட்சுமி மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் ஒருவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் என்று வலம் வந்த பட்டியலை பார்த்து தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று முதலில் நடிகை கஸ்தூரி தெரிவித்தார். தற்போது ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.