இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்
விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி இருக்கிறது.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.
Post a Comment